என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

தமிழில் கடைசியாக ரகு தாத்தா என்ற படம் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியானது. அதையடுத்து ஹிந்தியில் அவர் நடித்த முதல் படமான பேபி ஜான் வெளியானது. தெறி படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் கொஞ்சம் கிளாமர் ஹீரோயினாகவும் தலை காட்டினார் கீர்த்தி சுரேஷ். அதையடுத்து அவருக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் இதுவரை அவர் புதிய படங்களில் கமிட்டாகவில்லை. தற்போது அவர் அக்கா என்ற ஒரு வெப்சீரிஸில் நடித்திருக்கிறார். இது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. வரலாற்று கதையில் உருவாகியுள்ள இந்த அக்கா வெப் சீரிஸின் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் அடுத்தபடியாக ஹிந்தியில் இருந்து ஒரு ரொமாண்டிக் காமெடி படத்தில் நடிப்பதற்கும் கீர்த்தி சுரேஷ்க்கு வாய்ப்பு வந்துள்ளதாம். அப்படத்தில் நடிப்பது குறித்த பேச்சுவார்த்தையில் அவர் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.