போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

கமல் உடன் தக் லைப் படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு. அடுத்தப்படியாக தனது 49வது படமாக பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்கிறார். இதனை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளதாக தகவல்கள் கூறப்பட்டது.
இந்நிலையில் இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிக்க சமீபத்தில் தமிழில் வெளிவந்த டிராகன் படத்தின் மூலம் பிரபலமான கயாடு லோகர் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் துவங்கி டிசம்பர் மாதத்தில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டிராகன் படம் மூலம் கவனம் பெற்ற இவர் தற்போது இதயம் முரளி படத்தில் நடித்துள்ளார். அடுத்தடுத்து இவரை தேடி நிறைய பட வாய்ப்புகள் வர துவங்கி உள்ளன.