பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
பிரேமலு மலையாள படத்தில் நடித்து பிரபலமான மமிதா பைஜூ தமிழில் ஜி.வி.பிரகாஷ் நடித்த ரெபல் படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில் தான் அளித்த ஒரு பேட்டியில், ஜனநாயகன் படம் குறித்த சில தகவல்களை வெளியிட்டுள்ளார் மமிதா பைஜூ. அதில், ஜனநாயகன் படத்தில் இதுவரை பார்த்ததிலிருந்து வித்தியாசமான வேற லெவல் விஜய்யை பார்க்கலாம். அவரது ரசிகர்களுக்கு பிடித்தமான தரமான சம்பவங்கள் இந்த படத்தில் அதிகமாகவே இடம் பெற்றுள்ளது. இந்த படம் விஜய் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய ட்ரீட்டாக இருக்கும். இடம் குறித்த அப்டேட்டுகள் அடுத்த மாதத்தில் இருந்து அடுத்தடுத்து வெளியாகும் என்று தெரிவித்திருக்கிறார் மமிதா பைஜூ.