நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
பாலிவுட்டில் குறிப்பிடத்தக்க நடிகராக வலம் வருபவர் நடிகர் அதி இராணி. இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் சல்மான்கான் உடன் நடித்த போது தனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் 2001ல் சல்மான்கான் நடிப்பில் வெளியான 'சோரி சோரி சுப்கே சுப்கே' என்கிற படத்தில் ஷாருக்கானுடன் மோதும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதி இராணி. அப்போது ஒரு சண்டைக் காட்சியை படமாக்கிய போது சல்மான்கான், கண்ணாடி பிரேம் ஒன்றை இவர் மீது வீசியபோது நெற்றியில் காயம் பட்டு ரத்தம் வழிந்தது. உடனே படக்குழுவினர் பதறிப்போய் அவருக்கு முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தனர்.
ஆனால் இதை பார்த்தும் பார்க்காதது போல சல்மான்கான் அங்கிருந்து வெளியேறி தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் சென்று அமர்ந்து விட்டார். ஆனாலும் நடிகர் அதி இராணி அந்த காயத்திற்கு பெயின் கில்லர் போட்டு வலியை தாங்கிக் கொண்டு காயத்தின் மீது பேண்டேஜ் ஒட்டி மேக்கப் போட்டு தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றும் இல்லையென்றால் தயாரிப்பாளருக்கு தான் தேவையில்லாத நஷ்டம் ஏற்படும் என்றும் கூறி படப்பிடிப்பில் தொடர்ந்து நடித்துக் கொடுத்தார். அப்போது கதாநாயகி ஆன பிரீத்தி ஜிந்தா கூட இவரை விசாரித்து ஓய்வு எடுத்துக் கொள்ள வலியுறுத்தினார். ஆனால் சல்மான்கான் கண்டுகொள்ளாமல் சென்று விட்டார்.
மறுநாள் படப்பிடிப்பு நடைபெற்றபோது அதி இராணியை தனது அறைக்கு வரவழைத்த சல்மான்கான் நேற்று நடந்த செயலுக்காக தான் ரொம்பவே மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக நிஜமான வருத்தத்துடன் கூறியுள்ளார். “நேற்று நடந்த சம்பவத்திற்கு பிறகு உங்களுடைய முகத்தை பார்க்கவே எனக்கு ரொம்ப சங்கடமாக இருந்தது.. அதனால் தான் உங்களிடம் எதுவும் என்னால் பேச முடியவில்லை.. எதுவும் மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள்” என்று தனது வருத்தத்தை சல்மான்கான் வெளிப்படுத்தியுள்ளார். “சிலர் அப்படித்தான் உடனடியாக வருத்தம் தெரிவிப்பார்கள்.. சல்மான்கான் போன்றவர்கள் ஒருநாள் கழித்து வருத்தம் தெரிவிப்பார்கள்” என்று கூறியுள்ளார் அதி இராணி.