இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு சமீபத்தில் சில மர்ம நபர்களால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மும்பை பாந்த்ராவில் வசித்து வரும் கேலக்ஸி அப்பார்ட்மெண்ட்டில் உள்ள அவரது வீட்டுக்கு இரண்டு அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆனாலும் சில நாட்களுக்கு முன் ஜிதேந்திர குமார் சிங் என்கிற 23 வயதான நபர் ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் அந்த அப்பார்ட்மெண்ட் வெளியே நின்று நோட்டமிட்டுள்ளார். போலீசார் அவரை அங்கிருந்து விரட்டி அனுப்பினார்கள். ஆனாலும் அவர் அன்று மாலையே அந்த அபார்ட்மெண்டில் குடியிருக்கும் ஒருவருக்கு சொந்தமான காரில் மீண்டும் உள்ளே நுழையும் முயன்ற போது தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டார். சல்மான் கானை தான் பார்க்க விரும்பியதால் இப்படி வந்தேன் என்று அவர் கூறினாலும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது நடந்த இரண்டு நாட்களே ஆனா நிலையில் நேற்று 32 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அபார்ட்மெண்ட்டிற்குள் உள்ளே நுழைந்து சல்மான் கான் வசிக்கும் பிளாட்டிற்கு செல்லும் லிப்டிலும் ஏறி போலீஸ் பாதுகாப்பை மீறி அங்கே செல்ல முயற்சித்து இருக்கிறார். அப்போது அங்கிருந்த பாதுகாப்பு போலீசார் அவர் அத்துமீறி நுழைந்ததாக கூறி அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். அதே சமயம் அந்த பெண், “சல்மான் கானை ஆறு மாதத்திற்கு முன்பு ஒரு பார்ட்டியில் நான் சந்தித்தேன். அவரது அழைப்பின் பேரில் தான் அவரை நான் பார்க்க வந்தேன்” என்று கூறினாலும் கூட சல்மான்கான் வீட்டினர் அப்படி யாருக்கும் நாங்கள் அழைப்பு கொடுக்கவில்லை என்று அந்த தகவலை மறுத்துள்ளனர். இப்படி அடுத்தடுத்து சில நபர்கள் சல்மான் கானை பார்ப்பதாக கூறிக்கொண்டு பாதுகாப்பை மீறி உள்ளே நுழைவதை பார்த்து சல்மான் கானின் பாதுகாப்பை போலீசார் இன்னும் பலப்படுத்த வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.