சிம்பொனி இசை: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இளையராஜா | 'வாகா' நடிகை ரன்யா ராவ் வழக்கில் திடீர் திருப்பம் | 'லாக்டவுன்' படம் 'லாக்' ஆகி விட்டதா ? | திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்கும் லோகேஷ் கனகராஜ் | மீண்டும் ஹீரோவான 'பன்னீர் புஷ்பங்கள் ' சுரேஷ் | நயன்தாரா படத்தை ஓடிடியில் வெளியிடுவது ஏன்? : இயக்குனர் விளக்கம் | கதை நாயகன் ஆன இயக்குனர் ஜெகன் | கராத்தே ஹுசைனிக்கு தமிழக அரசு 5 லட்சம் உதவி | பிளாஷ்பேக்: மோசமான தோல்வியை சந்தித்த ரஜினி படம் | பிளாஷ்பேக் : கிருஷ்ணராக நடித்த நடிகை |
சின்னத்திரை மற்றும் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல ஆண்டுகளாக மீடியாவில் பயணித்து வருபவர் நீலிமா ராணி. 90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியான இவர் இப்போதும் இன்டஸ்ட்ரியில் முக்கிய நட்சத்திரமாக இருக்கிறார். இவர் மகளிர் தினத்தை முன்னிட்டு அக்னி சிறகே என்ற தலைப்பில் கல்லூரி மாணவிகள் மத்தியில் தனது வாழ்க்கை குறித்தான பல சுவாரசியமான சம்பவங்களையும், சோதனைகளையும் பட்ட கஷ்டங்களையும் குறித்து பேசி அந்த மாணவிகளை மோட்டிவேட் செய்துள்ளார்.
அவர் கூறுகையில், 'சினிமாவில் ஒரு படத்தை தயாரிக்க வேண்டும் என ஆசைப்பட்டோம். அதற்காக வட்டிக்கு கடன் வாங்கி நான்கரை கோடி செலவழித்து ஒரு படத்தை எடுத்தோம். ஆனால், அந்த படம் நினைத்த மாதிரி சரியாக வரவில்லை. கடைசியில் அந்த படத்தை குப்பையில் தான் போட்டோம். கடன் வாங்கி நடுத்தெருவில் நின்றோம். அன்று நானும் என் கணவரும் சரி இழந்தாச்சு, ரோட்டுக்கு வந்தாச்சு இனி இங்கிருந்து எப்படி நகர போகிறோம் என்று யோசித்தோம். அந்த சமயத்தில் மீண்டும் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தேன். அப்போது நடித்த தொடர்கள் தான் வாணி ராணி, தலையணை பூக்கள், தாமரை இதெல்லாம். அதில் கிடைத்த பணத்தை வைத்து தான் வாடகை வீட்டிற்கே சென்றோம். அதுவரை வாடகை வீட்டுக்கு போக கூட காசு இல்லை.
என் கணவரின் நண்பர் வீட்டில் ஒரு அறையில் எங்கள் பொருட்களை வைத்துக் கொண்டு அங்கு தான் வாழ்ந்தோம். இதையெல்லாம் எதிர்கொண்டு தைரியமாக கடந்து தான் 2017 சீரியல் தயாரிக்க ஆரம்பித்தோம். ஜீ தமிழில் என்றென்றும் புன்னகை, நிறம் மாறாத பூக்கள் என இரண்டு தொடர்களை 1500 எபிசோடுகளுக்கு தாயரித்திருக்கிறோம். படம் தயாரிப்பது தான் எங்களது குறிக்கோள். அது முடியவில்லை. பரவாயில்லை இன்று சீரியல் தயாரிக்கலாம். நாளை படம் தயாரிப்பதற்கான வாய்ப்பு நிறையவே கிடைக்கும். அதற்கான முயற்சிகளை செய்து கொண்டு தான் இருப்போம். இதற்காக நாம் சோர்ந்து போய் உட்கார்ந்தால் யாரும் நமக்கு கை கொடுக்க வரமாட்டார்கள். நமக்கு நாமே தான் கை கொடுத்து உதவிக்கொள்ள வேண்டும்' என பல அறிவுரைகளை அந்த நிகழ்வின் போது மாணவிகளுக்கு நீலிமா ராணி வழங்கியிருக்கிறார்.