அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் | பிளாஷ்பேக்: தாமதத்தால் ஏற்பட்ட 4 பெரும் இழப்புகள் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'அடங்காதே' | ஹரிஹர வீரமல்லு : காட்சிகள் குறைப்பு |
ஹிந்தியில் அறிமுகமாகி அடுத்த படத்திலேயே தமிழில் அறிமுகமானவர் ஜோதிகா. அஜித் நடித்த 'வாலி' படம் தான் அவர் அறிமுகமான முதல் படம். அதன்பின் பல ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம், சூர்யா என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.
அவர் அறிமுகமான ஹிந்தி சினிமாவை விடவும், மற்ற தென்னிந்திய மொழிகளை விடவும் தமிழில் அவரை பல சிறந்த கதாபாத்திரங்களில் நடிக்க வைத்திருந்தனர் இயக்குனர்கள்.
ஹிந்திப் படங்களிலும், வெப் தொடர்களிலும் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் தனது குடும்பத்தையே மும்பைக்கு மாற்றிவிட்டார். ஆனால், தான் வளர்ந்த தமிழ் சினிமாவையும் சேர்த்து தென்னிந்திய சினிமாவை குறை சொல்லி இருக்கிறார் ஜோதிகா.
சமீபத்திய பேட்டி ஒன்றில், “தென்னிந்திய சினிமாவில் நடிகைகள் நடனமாடவும் கதாநாயகர்களை பாராட்டிப் பேசவும் மட்டுமே அதிகமாக பயன்படுத்தப்படுகிறார்கள். ஆனால், ஹிந்தியில் அப்படியில்லை. தென்னிந்திய சினிமாவில் இன்னமும் அந்த நிலையே உள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகியிருந்த ஜோதிகா மீண்டும் நடிக்க வந்தார். அப்போது அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட படங்களான, “36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், தம்பி, பொன்மகள் வந்தாள்” ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், ஒன்று கூட ஓடவில்லை.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்த இத்தனை படங்களில் நடித்துவிட்டு, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இல்லை என்று கமெண்ட் செய்துள்ளார். “குஷி, ரிதம், பூவெல்லாம் உன் வாசம், 12 பி, தூள், பிரியமான தோழி, காக்க காக்க, பேரழகன், மன்மதன், சந்திரமுகி, வேடையாடு விளையாடு, சில்லுனு ஒரு காதல், பச்சைக்கிளி முத்துச்சரம்,” உள்ளிட்ட படங்களில் ஜோதிகாவுக்கு கதாநாயகர்களுக்கான சரிசமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
ஜோதிகாவின் பேட்டிக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். ஏற்றி விட்ட ஏணியை, வாழ வைத்த தமிழ் சினிமாவை, ஹிந்தியில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக குறை சொல்லி இருக்கிறார் ஜோதிகா.
இதற்கு மனைவியின் மும்பையை ஆசையை நிறைவேற்ற அவருடனேயே தமிழகத்தை விட்டு வெளியேறிய அவரது கணவரான சூர்யா என்ன சொல்லப் போகிறார் ?.