சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
மலையாள திரையுலகில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக குறிப்பிடத்தக்க வில்லன் நடிகராகவும் கடந்து சில வருடங்களாக குணச்சித்திர நடிகராகவும் தொடர்ந்து பயணித்து வருபவர் நடிகர் பாபு ஆண்டனி. தமிழில் 'பூவிழி வாசலிலே, சூரியன்' உள்ளிட்ட படங்களில் கொடூரமான வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து மிரட்டியவர்.
தற்போது மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் உருவாகி வரும் 'ஓடும் குதிர சாடும் குதிர' என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பாபு ஆண்டனி. பிரேமலு படத்தில் கவனம் ஈர்த்த நடிகர் அல்தாப் உசேன் தான் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பஹத் பாசிலுடன் இணைந்து நடித்த புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கத்தில் தற்போது பகிர்ந்து கொண்டுள்ளார் பாபு ஆண்டனி.
இவர் பஹத் பாசிலின் தந்தை பாசில் இயக்கத்தில் தமிழில் பூவிழி வாசலிலே', மலையாளத்தில் உருவான 'பூவின் புதிய பூந்தென்னல்' உள்ளிட்ட படங்களில் நடித்த போது அந்த படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்த பஹத் பாசில் இவரது மடியில் ஏறி அமர்ந்து விளையாடும் சிறுவனாக இருந்தார். அப்படிப்பட்டவர் இன்று பான் இந்திய நடிகராக மாறி இருப்பதை ஆச்சரியத்துடன் பார்க்கிறேன். தற்போது அவர் கதாநாயகனாக நடிக்கும் படத்திலேயே அவருடன் இணைந்து நடிப்பதை பெருமையாக நினைக்கிறேன் என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் பாபு ஆண்டனி.