ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்யுங்க : ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி | கட்டுப்படுத்த முடியவில்லை, நிறைய பரோட்டா சாப்பிட்டேன் : நித்யா மேனன் | இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் குவித்த ‛எப் 1' | இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி |
கடந்த 2023ல் கிட்டத்தட்ட நான்கு மிகப்பெரிய படங்களில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால் ஆச்சரியமாக கடந்த வருடம் ஸ்ருதிஹாசன் நடித்த ஒரு படம் கூட ரிலீஸ் ஆகவில்லை. அதேசமயம் இந்த வருடத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'கூலி', விஜய்யின் 'ஜனநாயகன்', மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் 'ட்ரெயின்' உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். இருந்தாலும் ரசிகர்களிடம் தனக்கு இடைவெளி விழுந்து விடக்கூடாது என சோசியல் மீடியாவில் அவ்வப்போது ரசிகர்களிடம் உரையாடியும் தனது படங்கள் குறித்த அப்டேட்டுகளை தெரிவித்தும் வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஸ்ருதிஹாசன் பேசும்போது, தான் மிகப்பெரிய திரையுலக பிரபலங்களின் வாரிசு என்பதால் பொதுவெளியில் தன்னை பற்றி தெரிந்தால் அது சுதந்திரமாக வலம் வருவதற்கு சிரமமாக இருக்கும் என்பதால் தான் படங்களில் நடிக்க துவங்குவதற்கு முன்பு தனக்கென ஒரு பொய்யான பெயரை உருவாக்கி அந்த பெயரிலேயே கொஞ்ச நாட்கள் வெளியே சுற்றினேன் என்று கூறியுள்ளார் ஸ்ருதிஹாசன்.
அதாவது கமல்ஹாசனின் மகள் என்று அறிமுகப்படுத்தி யாரிடமாவது பேச ஆரம்பித்தால் அவர்களின் பேச்சு முழுவதும் தனது பெற்றோரின் பிரபலத்தை பற்றிய பேச்சாக மாறிவிடும் என்பதால் தன்னைப் பற்றி தெரியாத யாரிடமாவது பேச நேரும்போது இந்த பொய்யான பெயரை கூறி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வாராம் ஸ்ருதிஹாசன். அதனால் சம்பந்தப்பட்டவர்களுடன் எந்த தயக்கமும் இன்றி தான் விரும்பியபடி உரையாட முடிந்தது என்றும் கூறியுள்ள ஸ்ருதி ஹாசன், ஆனால் ஒரு கட்டத்தில் படங்களில் நடிக்க துவங்கிய பின்பு இந்த பொய்யான பெயர் எடுபடவில்லை என்றும் நகைச்சுவையுடன் கூறியுள்ளார்.