'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் | பிளாஷ்பேக்: தாமதத்தால் ஏற்பட்ட 4 பெரும் இழப்புகள் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'அடங்காதே' |
90களில் முன்னணி கதாநாயகிகளாக இருந்தவர்கள் ரம்பா, மீனா, ரோஜா. பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர்கள். இப்போதும் நெருங்கிய நட்பில் அவர்கள் மட்டுமல்லாது சங்கீதா, மகேஸ்வரி, ஸ்ரீதேவி என ஹீரியின்ஸ் நட்பு வட்டம் உள்ளது. இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் சென்னையில் நடந்த பிரபுதேவாவின் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
ரோஜா, மீனா, ரம்பா, மகேஸ்வரி ஆகியோர் பிரபுதேவாவுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்கள். பிரபுதேவாவின் நடன நிகழ்ச்சியில் இவர்கள் மேடையேறி உற்சாகமாக நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்தார்கள். அந்த புகைப்படங்களைப் பகிர்ந்த மீனா, “அன்பு, அரவணைப்பு மற்றும் பழைய நினைவுகளுடன் ஒரு அழகான மாலை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் சமீப காலங்களில் அடிக்கடி இசை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதுவும் இந்திய சினிமாவின் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கப்படும் பிரபுதேவாவின் நடன நிகழ்ச்சி சென்னையில் நடந்தது இதுவே முதல் முறை.