பைக் சாகசம் செய்து வீடியோ வெளியிட்ட பார்வதி | ஜன., 7ல் பாக்யராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம் ; ரஜினி பங்கேற்கிறார் | கோல்கட்டாவில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சிறந்த நடிகர் விருது | 30 வருடம் கழித்து கேரள துறைமுகத்திற்கு விசிட் அடித்த பம்பாய் படக்குழு | மறைந்த நடிகர் சீனிவாசனின் உண்மையான வயது என்ன? கிளம்பிய விவாதமும் தெளிந்த உண்மையும் | ஜெயிலர் 2வில் பெரிய ரோலில் நடிக்கிறேன் : சிவராஜ்குமார் | உம்மைப் பற்றி பேசாத நாளில்லை : கமல் | ஜனநாயகன் ஆடியோ விழாவில் அரசியல் பேசக்கூடாது : மலேசிய அரசு தடையாம் | ஜனவரி 23-ல் நெட் பிளிக்ஸில் தேரே இஸ்க் மே | ஜனவரி 9ல் ஜனநாயகன், ஜனவரி 10ல் பராசக்தி : என்னென்ன பிரச்னை ஏற்படும் தெரியுமா? |

சென்னை : 'ஜெயலலிதா இங்கு இல்லை என்று சொன்னாலும் கூட, அவர் நினைவு எப்பொழுதும் எல்லோர் மனதிலும் இருக்கும்' என ஜெயலலிதா பிறந்த நாள் முன்னிட்டு போயஸ் கார்டனில் அவரது படத்துக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த் பேட்டி அளித்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளையொட்டி போயஸ் கார்டன் இல்லத்தில் அவரது படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் மரியாதை செலுத்தினார்.
பின்னர் நிருபர்களுக்கு ரஜினி அளித்த பேட்டி: ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் பங்கேற்க வேண்டும் என்ற ஜெ., தீபா அழைப்பை ஏற்று வந்தேன். இங்கு நான் வந்தது இது நான்காம் முறை. 1977ல் அவரை பார்க்க முதல் முறையாக வந்திருந்தேன். நாங்கள் இருவரும் சேர்ந்து நடிப்பதாக ஒரு திட்டம் இருந்தது. அப்போது அவர் பார்க்க விரும்புவதாக கூறினார். அப்போது வந்திருந்தேன். 2ம் முறை ராகவேந்திரா திருமண மண்டபம் திறப்பு விழாவுக்கு அழைக்க வந்தேன்.
3ம் முறை என் மகள் திருமணத்துக்கு அழைக்க வந்தேன். இது நான்காம் முறை. அவர் இங்கு இல்லை என்று சொன்னாலும் கூட, அவர் நினைவு எப்பொழுதும் எல்லோர் மனதிலும் இருக்கும். இங்கு வந்து அவர் வாழ்ந்த வீட்டில், அஞ்சலி செலுத்தி அவரது இனிப்பான, சுவையான நினைவுகளோடு செல்கிறேன். அவர் நாமம் வாழ்க.
இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார்.