அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் | நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா | பேனர் வைக்க விடாமல் தடுத்தது யார்? மனம் திறப்பாரா கேபிஒய் பாலா | புகழ் நடிக்கும் '4 இடியட்ஸ்' | பூ வச்சது குத்தமாய்யா : நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் |
சினிமாவின் ஆரம்ப காலகட்டங்களில் புராணக் கதைகளும் நாட்டுப்புற கதைகளுமே படமாக்கப்பட்டு வந்தது. இவற்றில் தியாகராஜ பாகவதர், பியு சின்னப்பா போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து வந்தார்கள். அவர்கள் வாள் சண்டை, கம்பு சண்டை, போன்ற சண்டை காட்சிகளில் நடித்தாலும் அவை கதைக்கு தேவையான ஒன்றாக இருந்தது. ஆனால் சண்டைக் காட்சிகளுக்கென்று கதை எழுதி, அதில் நடித்தவர் 'பாட்லிங் மணி'. இவர் தான் தமிழ் சினிமாவில் முதல் ஆக்ஷன் ஹீரோவாக போற்றப்படுகிறார்.
அப்போதைய பாலிவுட் படங்களில் நதியா என்ற நடிகை ஆக்ஷன் ஹீரோயினாக நடித்து அந்த படங்கள் பெரிய வெற்றி பெற்று வந்தன. தமிழிலும் அதுபோன்ற படங்கள் தயாரானது. அதில் பாட்லிங் மணி நடித்தார். அப்படி உருவான படம், 'மெட்ராஸ் மெயில்'. 1936ல் வெளிவந்த இந்தப் படம்தான் தமிழில் முதல் முழு நீள ஆக்ஷன் படம். திரிவேதி இயக்கிய இந்தப் படத்தின் கதையையும் பாட்லிங் மணியே எழுதினார்.
இதையடுத்து, மிஸ் சுந்தரி, 'ஹரிஜன சிங்கம்' திரைப்படங்கள் பாட்லிங் மணி நடிப்பில் வெளிவந்தன. ஹரிஜன சிங்கம் படத்தை அவரே இயக்கினார். இந்தப் படங்களை அடுத்து அவர் நடித்த படம், 'தாய்நாடு' டி.எஸ்.மணி எழுதி, இயக்கினார். சித்ரகலா மூவி டோன் சார்பில் எஸ்.எம்.நாயகம் தயாரித்தார். பாட்லிங் மணியுடன் எஸ்.டி.வில்லியம்ஸ், வி.பி. எஸ்.மணி, டி.கே.கிருஷ்ணையா, எம்.ஆர்.சுந்தரி, என்.சி.மீரா உட்பட பலர் நடித்தனர். என்.நாராயண ஐயர் இசை அமைத்திருந்தார்.
சில படங்களில் நடித்த நிலையில் பாட்லிங் மணி சினிமாவை விட்டு விலகினார். அதற்கான காரணம் தெரியவில்லை.