ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ | கூலி படத்தில் கமலா... : லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் | தற்கொலைக்கு முயற்சித்தாரா ‛டிக் டாக்' இலக்கியா... : ஸ்டன்ட் இயக்குனர் மீது குற்றச்சாட்டு | மீண்டும் இசையில் கவனம் செலுத்தப் போகிறேன்: விஜய் ஆண்டனி | மீண்டும் ‛அந்த 7 நாட்கள்' படத்தில் நடிக்கும் கே.பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஒரே தமிழ் படத்தில் நடித்த வங்காள நடிகர் |
மக்கள் திலகம் எம்ஜிஆர் நல்ல படங்களை பார்ப்பதும் பாராட்டுவதும் வழக்கம். பாரதிராஜா, கே பாக்யராஜ், பாலுமகேந்திரா மகேந்திரன் உள்ளிட்ட பல இயக்குனர்கள் அவரது விருப்பமான இயக்குனர்களாக இருந்தார்கள். பல்வேறு காலகட்டங்களில் அவர்களை அழைத்து பாராட்டியுள்ளார். அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். ஆனால் அவர் ஒரு இயக்குனருக்கு தனியாக பாராட்டு விழா நடத்தி விருது வழங்கியது ஸ்ரீதர் ராஜன் என்ற இயக்குனருக்கு.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீதர் ராஜன் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தில் பணியாற்றி வந்தார். இதனால் இந்திய சினிமாவில் முன்னோடிகள் பலர் அவருக்கு அறிமுகம்.
தமிழ்நாட்டில் ஒரு ரூபாய் கூலி அதிகமாக கேட்டதற்காக எரித்துக் கொல்லப்பட்ட தஞ்சை மாவட்டம் கீழவெண்மணி ஏழை விவசாயிகளின் வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு படம் இயக்குமாறு மேற்கு வங்காள் அமைச்சர் புத்ததேவ் பட்டாச்சாரியார் ஸ்ரீதர் ராஜனை கேட்டுக்கொண்டார். ஆனால் இந்த சம்பவம் தமிழ்நாட்டில் நடந்தது என்பதால் தமிழிலேயே இந்த படத்தை இயக்கலாம் என்று முடிவு செய்த ஸ்ரீதர் ராஜன், எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய 'குருதி புனல்' என்ற நாவலை மையமாக வைத்து 'கண் சிவந்தால் மண் சிவக்கும்' என்ற படத்தை இயக்கினார்.
இந்த படத்தில் விஜயமோகன், ராஜேஷ், ரவீந்திரன், பூர்ணிமா, கல்கத்தா விஸ்வநாதன் ஆகியோர் நடித்தார்கள். மேற்கு வங்க ஒளிப்பதிவாளர் சோமந்த் ராய் ஒளிப்பதிவுசெய்திருந்தார்.
இந்த படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குனர் என்ற தமிழக அரசு விருது ஸ்ரீதர் ராஜனுக்கு கிடைத்தது. படத்தை பார்த்த எம்ஜிஆர் ஸ்ரீதர் ராஜனுக்கு என்று தனியாக பாராட்டு விழா நடத்தி அண்ணா விருது வழங்கினார்.
ஸ்ரீதர் ராஜன் அதன் பிறகு இரவு பூக்கள், பூக்கள் விடும் போது என்ற இரண்டு படங்களை இயக்கினார். அதன் பிறகு படம் எதுவும் இயக்கவில்லை. இவர் பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசன் மகள் ஜெயாவின் கணவர்.