மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு பையனூரில் உள்ள திரைப்பட நகரத்தில் அடுக்குமாடி வீடு கட்ட அரசு அனுமதி அளித்திருந்தது. ஆனால் பல ஆண்டுகளாக இந்த பணி தொடங்கப்படாததால், இது தொடர்பான அனுமதி காலாவதியாகி இருந்தது. இதனை புதுப்பிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது இந்த அனுமதி புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையை வருமாறு : தமிழ் திரைப்படத் துறையில் உள்ள தயாரிப்பாளர்கள் முதல் கடைநிலை தொழிலாளர்கள் வரை அனைவரும் பயன்பெறும் வகையில், தமிழ் திரைப்பட துறையில் இருக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், சின்னத்திரை கூட்டமைப்பு ஆகிய அனைத்து சங்கங்களின் உறுப்பினர்கள் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக்கொள்ள கடந்த 2010ம் ஆண்டு அன்றைய தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியால் செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் 100 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. அதற்கு அவரே திரைப்பட நகரம் என்று பெயரும் சூட்டினார்.
ஆனால், சில காரணங்களால் அந்த இடத்தின் அரசாணை புதுபிக்கப்படாமல் இருந்தது. அதனை புதுப்பித்து தர வேண்டி தமிழக முதல்வரிடம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. தற்போது அதனை புதுப்பித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக முதல்வருக்கும், அரசுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.