சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

7ஜி நிறுவனம் சார்பில் சிவா தயாரிக்கும் படம் 'சப்தம்'. ஈரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு அறிவழகன், ஆதி கூட்டணியில் உருவாகியுள்ள படம். வருகிற 28ம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் ஆதி நாயகனாக நடிக்க லக்ஷ்மி மேனன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சிம்ரன், லைலா, கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர்.
படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் ஆதி பேசியதாவது : என் நண்பர்களிடம் இந்தப்படம் பற்றி சொல்லும் போது ஏன் ஹாரர் எனக் கேட்பார்கள், ஹாரர் என்றாலே கொஞ்சம் கீழாக பார்க்கும் பார்வை இருக்கிறது. அப்போ ஈரமும் ஹாரர் தானே என்பேன், ஈரம் சூப்பராக இருக்கும் என்று பாராட்டுவார்கள். அது ஹாரரில் வித்தியாசமாக இருக்கும் என்று பாராட்டுவார்கள், அது தான் அறிவழகன் சார், அவர் இயக்கத்தில் ஈரம் மாதிரி இன்னொரு படம் கிடைக்குமா? என நினைத்துள்ளேன், அதை மீண்டும் அறிவழகன் எனக்குத் தந்துள்ளார்.
இந்தப்படத்தில் பாரா நார்மல் இன்வஸ்டிகேட்டராக நடித்துள்ளேன். இது முழுக்க முழுக்க இந்த டீமின் படம். அவர்கள் உழைப்பு தான் முழுப்படமும். ஹாலிவுட் படம் மாதிரி என அடிக்கடி சொல்வோம், ஆனால் இங்கு நம்ம சினிமாவை ஹாலிவுட்டை தாண்டிய தரத்தில் உருவாக்கியிருக்கும் படம் தான் சப்தம் என்றார்.
பின்னர் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தவர் விரைவில் மரகத நாணயம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகவும் அதில் தனது மனைவி நிக்கி கல்ராணி தன்னுடன் இணைந்து நடிப்பதாகவும், இன்னொரு முன்னணி நடிகையும் நடிக்க இருப்பதாகவும் கூறினார்.