சிம்பு 49வது படத்தில் இணைந்த சந்தானம் | ஷங்கர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிக்க இருந்த அந்நியன் ஹிந்தி ரீமேக் டிராப்பா... | ஸ்ரீ லீலாவை பின்தொடரும் 11 மில்லியன் பேர் : இரண்டே மாதங்களில் 2 மில்லியன் அதிகரிப்பு | சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடித்த ஜோதிகா | ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ஜூனியர் என்டிஆர் படம் | அசோக் செல்வனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்? | விமல் நடிப்பில் 'ஓம் காளி ஜெய் காளி' | பிரபாஸிற்கு ஜோடியாகும் பாக்யஸ்ரீ போஸ் | மோகன்லாலுக்கு வில்லனாக நடிக்க மறுத்த ஜீவா | ஆர்.டி.எக்ஸ் இயக்குனருடன் இணைந்த துல்கர் சல்மான் |
தமிழ் சினிமாவில் பிறமொழி கலைஞர்கள் ஏராளமானோர் பணியாற்றியுள்ளனர், தற்போதும் பணியாற்றி வருகிறார்கள். ஆங்கில இயக்குனர்கள், மேற்கு வங்க இயக்குனர்கள் பணியாற்றி உள்ளனர். தற்போதும் தெலுங்கு, மலையாள கலைஞர்கள் தமிழில் பணியாற்றி வருகிறார்கள். ஆனாலும் காஷ்மீர் கலைஞர் ஒருவர் இயக்குனராகவும், நடிகராகவும் பணியாற்றியுள்ளார். அவர் வஹாப் காஷ்மீரி.
சினிமா ஆசை கொண்ட வஹாப் காஷ்மீரி. தங்கள் சொந்த மாநிலத்தில் திரைப்பட வாய்ப்புகள் அதிகம் இல்லை என்பதை உணர்ந்து கோல்கட்டா வந்தார். அங்கு படங்களில் பணியாற்றியவர் சில படங்களில் நடிக்கவும் செய்தார். ஏராளமான படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.
பின்பு தென்னிந்திய சினிமாவில் பணியாற்ற விரும்பி சென்னையில் குடியேறினார். சென்னை கோவை மற்றும் சேலத்தில் செயல்பட்டு வந்த பிரபலமான ஸ்டூடியோக்களில் உதவி இயக்குனராகவும், உதவி கேமராமேன் ஆகவும் மாத சம்பளத்தில் பணியாற்றி வந்தார். ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'ராணி' என்ற படத்தில் வில்லனாக நடித்தார். இதுதவிர அவர் கண்ணதாசனின் 'சிவகங்கைச் சீமை', ஜெயகாந்தனின் 'யாருக்காக அழுதான்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
அவர் இயக்கிய ஒரே படம் 'சித்ரா'. இந்த படத்தில் கே.எல்.பி. வசந்தா, டிஎஸ் பாலையா, டிஎஸ் துரைராஜ், கேகே பெருமாள் உள்பட பலர் நடித்திருந்தனர். மார்டன் தியேட்டர் சார்பில் டிஆர் சுந்தரம் தயாரித்திருந்தார்.
யுத்த பின்னணியில் உருவான ஒரு துப்பறியும் கதை இது. ஹாலிவுட் படம் ஒன்றைத் தழுவி இது உருவாகி இருந்தது. இந்தப் படம் தோல்வியடைந்ததால் அதற்குப்பிறகு அவருக்கு எந்த சினிமா வாய்ப்பும் கிடைக்கவில்லை. ஸ்டுடியோக்களிடம் வேலை இல்லை என்று திருப்பி அனுப்பப்பட்டார்.
சில காலம் பல ஸ்டுடியோக்களில் சிறு சிறு வேலை செய்த பின்னர் என்ன ஆனார் என்ற தகவல் இல்லை. அவர் தனது சொந்த மாநிலத்துக்கு சென்று விட்டார் என்றும், சென்னையிலேயே நோயுற்று மருத்துவமனையில் அனாதையாக இறந்தார் என்றும் கூறுவார்கள் .