புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் | கேரளாவில் ஜனநாயகன் முதல் நாள் முதல் காட்சி 6 மணிக்கு தான் | ஷாருக்கானின் பதான் பட வசூலை முறியடிக்கும் துரந்தர் | 2026ல் ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் நிவின் பாலி, மமிதா பைஜூ படம் | மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் ரோஜா | சம்பளத்தை உயர்த்தினாரா ராஷ்மிகா மந்தனா | விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? | சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் |

தற்போது கிரீஸ் இயக்கத்தில் 'காதி' என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ளார் அனுஷ்கா. கிரைம் திரில்லர் கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஒரு கஞ்சா வியாபாரி வேடத்தில் நடித்துள்ளார் அனுஷ்கா. இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திரா, ஒடிசா எல்லைப் பகுதியில் நடைபெற்று வந்த நிலையில், ஏப்ரல் 18ம் தேதி உலகம் எங்கும் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு செய்தியில், இந்த காதி படத்தின் வெளியீட்டுக்கு முன்னதாக இரண்டு தியேட்டர் டிரைலர்களை வெளியிடுவதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளது. மார்ச் மாதத்தில் முதல் டிரைலரும், படத்தின் ரிலீஸ்க்கு முன்பு இரண்டாவது டிரைலரையும் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். இந்த படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவும் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார்.