இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

இயக்குனர் லிங்குசாமி தமிழில் ஆனந்தம், ரன், சண்டக்கோழி , பையா உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர். கடைசியாக இவரது இயக்கத்தில் அஞ்சான், சண்டக்கோழி 2, தி வாரியர் ஆகிய படங்கள் தொடர் தோல்வியை தழுவின.
சமீபகாலமாக லிங்குசாமி அடுத்த படம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில் லிங்குசாமி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது, "மகாபாரதத்தை வைத்து அபிமன்யு, அர்ஜூனன் என இரண்டு பாக கதையம்சம் கொண்ட படத்தினை உருவாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ. 700 கோடி பட்ஜெட், தற்போது எல்லா தொழில்நுட்ப வசதிகளும் உள்ளது. இதனால் பெரிய போர் காட்சிகளை உயிரோட்டமாக கொண்டு வர முடியும். மகாபாரதம் என்றால் நமக்கு பி.ஆர். சோப்ராவின் படைப்பு தான் நினைவுக்கு வரும். அது மாதிரி வேலை எனக்கு வந்துள்ளது. சீக்கிரம் அதற்கான அறிவிப்பு வெளிவரும்" என தெரிவித்துள்ளார்.