மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
1946ம் ஆண்டில் பி.யு.சின்னப்பா ஹீரோவாக நடித்த படம் 'அர்த்தநாரி'. இது தமிழ்நாட்டின் புகழ்பெற்ற நாட்டுப்புறக் கதை ஒன்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட படம்.
காந்தார சாம்ராஜ்யத்தின் இளவரசிகள் எம்.எஸ்.சரோஜா மற்றும் எம்.வி.ராஜம்மா. துரதிர்ஷ்டத்தால் ராஜ்ஜியம் உட்பட அனைத்தையும் இழந்து கங்கை நதிக்கரையில் இருக்கும் ஆசிரமத்தில் வாழ்கின்றனர். சிறையில் இருக்கும் இளவரசன் விஜயவர்மனான சின்னப்பா, அங்கிருந்து தப்பித்து தனது ராஜ்ஜியத்தை மீட்கத் திட்டம் தீட்டுகிறார். அதோடு அவர் இளவரசிகளை காப்பாற்ற வேண்டிய நிலைக்கும் தள்ளப்படுகிறார். இரண்டு இளவரசிகளையும் ராஜ்யத்தையும் மீட்டாரா என்பது தான் படத்தின் கதை.
டி.ஆர்.ராமச்சந்திரன், என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், காளி.என்.ரத்தினம் உட்பட பலர் நடித்தனர். பி.எஸ்.ராமையா திரைக்கதையை எழுதினார். மெட்ராஸ் யுனைட்டெட் ஆர்டிஸ்ட்ஸ் கார்பரேஷன் நிறுவனத்தின் இசைக் குழுவினர் இசையமைத்தனர். பாடல்களை பாபநாசம் சிவன், ராஜகோபால ஐயர் எழுதினர். சில பாடல்களைச் சின்னப்பா பாடினார்.
டி.ஆர்.ரகுநாத் இயக்கிய இதன் படப்பிடிப்பு, அடையாறில் அமைந்திருந்த பிரகதி ஸ்டூடியோவில் நடந்தது. தியாகராஜ பாகவதற்கும் பியு சின்னப்பாவுக்கும் கடுமையான போட்டி இருந்த காலத்தில் வெளியான இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. பியு சின்னப்பா படத்தின் தோல்வியை தியாகராஜ பாகவதர் ரசிகர்கள் கொண்டாடியது தனிக்கதை.