ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

பிப்ரவரி 21ம் தேதியான நாளை தமிழில், 'டிராகன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், ஈடாட்டம், பிறந்தநாள் வாழ்த்துகள், பல்லவபுரம் பிளாட் எண் 666” ஆகிய படங்களுடன் தமிழிலும் சேர்தே எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் 'ராமம் ராகவன்' என 6 படங்கள் வெளியாக உள்ளன.
இவற்றில் 'டிராகன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' ஆகிய படங்களுக்கு இடையேதான் போட்டி. இளம் ரசிகர்களை குறிவைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த இரண்டு படங்களில் 'டிராகன்' படம் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்பதிவில் முந்தி வருவதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. 'லவ் டுடே' படத்தின் மூலம் பெரிய வெற்றியை பிரதீப் ரங்கநாதன் பெற்றதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறதாம்.
தனுஷ் இயக்கியிருந்தாலும் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தில் அறிமுக நடிகரும், வளரும் நட்சத்திரங்களும் நடித்திருப்பதால் எதிர்பார்ப்பு குறைவாகவே இருக்கிறது என்கிறார்கள். இன்று மாலை இப்படத்தின் பிரிமியர் காட்சி சென்னையில் நடக்கிறது.
இரண்டு படங்களின் முதல் காட்சி முடிந்த பின் ரசிகர்களின் ஆதரவும், வரவேற்பும் எந்தப் படத்திற்கு இருக்கிறதோ அந்தப் படம் இந்த வார இறுதி வசூலையும் பெற்றுத் தரும் என்று நம்புகிறார்கள். அது வரை பொறுத்திருப்போம்.




