சென்னையில் மழை : படகு சவாரி கேட்ட பூஜா ஹெக்டே | பேரனுக்கு நாளை(செப்.,19) காது குத்து விழா வைத்திருந்த நிலையில் ரோபோ சங்கர் மரணம் | ரோபோ சங்கர் உடலுக்கு கமல் அஞ்சலி | பிளாஷ்பேக்: அமரத்துவம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் “அமரகவி” | டிரஸ் வாங்க பணமின்றி புரமோஷனுக்கு படப்பிடிப்பு உடைகளையே அணிந்த விஜய் தேவரகொண்டா | திரிஷ்யம் 3 ரிலீஸ் முதலில் மலையாளத்தில்.. பிறகுதான் ஹிந்தியில் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | உன்னி முகுந்தன் விலகிய நிலையில் மார்கோ 2ம் பாக டைட்டில் அறிவிப்பு | மீண்டும் வெளியாகும் அவதார் வே ஆப் வாட்டர் | பிளாஷ்பேக் : தோல்வி அடைந்த 3டி படம் | பிளாஷ்பேக்: ஆர்.எஸ்.மனோகர் நாயகனாக நடித்த லக்ஷ்மி |
2018ல் விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படம் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. நட்பு, காதல் என இரு தளங்களில் அழகாக பயணித்த இந்த படத்தை ஒரு பீல் குட் படமாக இயக்கி இருந்தார் பிரேம்குமார். அதனை தொடர்ந்து சில வருட இடைவெளிக்கு பிறகு சமீபத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி நடித்த மெய்யழகன் என்கிற படத்தையும் இயக்கினார்.
தற்போது ஹிந்தியில் ஒரு புதிய படத்தை இயக்குவதற்காக ஸ்கிரிப்ட் ஒன்றை தயார் செய்து வருகிறார் பிரேம்குமார். அது மட்டுமல்ல 96 படத்தையே முதலில் தான் ஹிந்தியில் படமாக இயக்க விரும்பி தான் கதை எழுதியதாகவும் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது கூறியுள்ளார் பிரேம்குமார்.
சமீபத்தில் இந்திய அளவில் நடைபெற்ற எழுத்தாளர்கள் கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட பிரேம்குமார் பேசியபோது, “என் தந்தை வடநாட்டில் வசித்தவர். நான் வளர்ந்தது எல்லாமே வடநாட்டில் தான். அதனால் எனக்கு ஹிந்தி ரொம்பவே சரளமாக தெரியும். நான் பார்த்து வளர்ந்தது பெரும்பாலும் ஹிந்தி படங்களை தான். அதனால் 96 படத்தின் கதையை எழுதியபோதே அதை ஹிந்தியில் தான் இயக்க வேண்டும் என்று எழுதினேன். அதில் அபிஷேக் பச்சன் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்றும் முடிவு செய்து அதற்காக முயற்சி செய்தபோது காரியங்கள் கைகூடி வரவில்லை. அதன் பிறகு தான் அதை தமிழில் இயக்கினேன். மெய்யழகன் படத்திற்கு பிறகு தற்போது ஹிந்தியில் இயக்கும் விதமாக ஒரு படத்திற்கான கதையை எழுதி முடித்து இருக்கிறேன்” என்று கூறியுள்ளார் பிரேம்குமார்.