சிம்பு 49வது படத்தில் இணைந்த சந்தானம் | ஷங்கர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிக்க இருந்த அந்நியன் ஹிந்தி ரீமேக் டிராப்பா... | ஸ்ரீ லீலாவை பின்தொடரும் 11 மில்லியன் பேர் : இரண்டே மாதங்களில் 2 மில்லியன் அதிகரிப்பு | சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடித்த ஜோதிகா | ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ஜூனியர் என்டிஆர் படம் | அசோக் செல்வனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்? | விமல் நடிப்பில் 'ஓம் காளி ஜெய் காளி' | பிரபாஸிற்கு ஜோடியாகும் பாக்யஸ்ரீ போஸ் | மோகன்லாலுக்கு வில்லனாக நடிக்க மறுத்த ஜீவா | ஆர்.டி.எக்ஸ் இயக்குனருடன் இணைந்த துல்கர் சல்மான் |
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான யோகி பாபு, காமெடி வேடங்களில் மட்டுமின்றி கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து வரும் அவர் சென்ற கார் விபத்துக்குள்ளாகி அவர் பலத்த காயமடைந்ததாகவும், அவருடன் சென்ற உதவியாளருக்கும் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாகவும், சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வைரலானது.
இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகர் யோகி பாபு, “எனக்கு எந்தவித விபத்தும் ஏற்படவில்லை, நான் நலமாக இருக்கிறேன். தற்போது ஒரு படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறேன். அந்த படப்பிடிப்புக்காக வந்திருந்த ஒரு கார் விபத்தில் சிக்கியது. அந்த காரில் நானும், என் உதவியாளரும் பயணிக்கவில்லை. ஆனால், நானும், என் உதவியாளரும் அந்த காரில் சென்று விபத்தில் சிக்கி காயமடைந்ததாக தவறான தகவல்கள் பரவி வருகிறது. அது முற்றிலும் தவறு என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விசயம் அறிந்து என் நண்பர்கள், திரை பிரமுகர்கள், ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் என பலர் என்னை தொடர்பு கொண்டு நலம் விசாரித்து வருகிறார்கள். என் மீது அக்கறை கொண்ட அவர்கள் அனைவருக்கும் இந்த சமயத்தில் என் அன்பு கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.