இன்னொரு இயக்குனரை நடிகராக களத்தில் இறக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் | சுவாசிகாவிற்கு லேசான காயம் | கனவு நிறைவேறிய நாள் - அஸ்வத் மகிழ்ச்சி | தங்கக் கடத்தலில் கைது செய்யப்பட்ட விக்ரம் பிரபு பட நாயகி | அது பிரபுவிற்கு சொந்தமானது : சிவாஜி வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை ரத்து செய்ய கோரி ராம்குமார் மனு | முதல் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மறக்காத சமந்தா | 20 நாட்கள் பிணமாக நடித்த ரூபா | ஆண்டனி வர்க்கீஸின் புதிய படம் அறிவிப்பு | மீண்டும் இணைந்த 'மெஹந்தி சர்க்கஸ்' கூட்டணி | பிளாஷ்பேக் : நீதிபதியில் 5 ஹீரோயின்கள் |
‛பாரதி கண்ணம்மா' தொடரின் மூலம் சின்னத்திரை ஹீரோவாக அறிமுகமானவர் அருண். அதேபோல் ‛ராஜா ராணி 2' தொடரில் வில்லியாக எண்ட்ரி கொடுத்து அசத்தியவர் வீஜே அர்ச்சனா. இவர்கள் இருவரும் காதலித்து வரும் தகவல் சில ஆண்டுகளுக்கு முன்பே விஜய் டிவி விருது நிகழ்ச்சியின் மூலம் வெளியானது. எனினும், இருவரும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்தவொரு தகவலையும் அறிவித்ததில்லை. அதேபோல் இன்ஸ்டாகிராமிலும் இருவரும் சேர்ந்து புகைப்படங்கள் எதையும் வெளியிட்டதில்லை.
அண்மையில் நிறைவுற்ற பிக்பாஸ் சீசன் 8ல் அருண் பிரசாத் போட்டியாளராக கலந்து கொண்டபோது தான் அர்ச்சனா, அருண் பிரசாத் தான் தனது வாழ்க்கை என அறிவித்தார். இந்நிலையில், நேற்றைய தினம் காதலர் தினத்தை முன்னிட்டு அருண் பிரசாத் அர்ச்சனாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு தனது 5 வருட காதல் வாழ்க்கை குறித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அர்ச்சனாவுக்கு தனது காதலர் தின வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.