படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் |
மனோ கிரியேஷன் சார்பில் ஏ. ராஜா தயாரிப்பில், ஆரி அர்ஜூனன், தீப்ஷிகா, பவித்ரா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அதன் தலைப்பினை, படக்குழு படத்தின் நாயகன் ஆரி அர்ஜூனன் பிறந்தநாளான பிப்ரவரி 12ல் அறிவித்தது. படத்தின் தலைப்பு '4த் புளோர்' (நான்காவது மாடி). படத்தை சுந்தரபாண்டி எழுதி இயக்கியுள்ளார். லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தரண்குமார் இசை அமைத்துள்ளார்.
ஆரியின் பிறந்தநாளை பூந்தமல்லியில் உள்ள பார்வைத்திறன் குன்றியோர் பள்ளியில் கேக் வெட்டியும், விருந்து பரிமாறியும் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து படத்தின் தலைப்பினை பார்வைத்திறன் குன்றிய வயதானவர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் ஆரி அர்ஜூனன் வெளியிட்டார். ஆரி தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அவர் நடித்துள்ள 'அலேகா, பகவான், டிஎன் 43, மான்' படங்கள் வெளிவராமல் இருக்கிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நடித்து முடித்துள்ளார்.