100 நாளுக்கு பின்தான் இனி ஓ.டி.டி.யில் சினிமா; தியேட்டர்கள் அதிபர்கள் சங்கம் அதிரடி | ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' |

மதுரை எம்பி சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலை சினிமாவாக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட இயக்குனர் ஷங்கர், அதற்கான உரிமையை வாங்கி வைத்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பே வேள்பாரி நாவலுக்கு திரைக்கதை எழுதி வைத்துள்ளார். கடந்த ஆண்டே அந்த நாவலை சினிமாவாக்க முயற்சிகள் எடுத்தார். சூர்யாவை வைத்து படமாக்க முயற்சிகள் செய்தார். அஜித்திடம் கூட பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர், இந்தியன் 2 படங்கள் படு தோல்வி அடைந்து, பல கோடி இழப்பை ஏற்படுத்த வேள்பாரி அடுத்த கட்டத்தக்கு நகராமல் தவித்தது.
இந்தியன் 3 படத்தை முடிக்கிற வேலைகளில் ஷங்கர் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது வேள்பாரி நாவலை சினிமாவாக்க ஷங்கர் மீண்டும் முயற்சிக்கிறார். அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்க உள்ளது என ஷங்கர் தரப்பில் இருந்து நேற்று செய்திகள் கசிய விடப்பட்டுள்ளது. வேள்பாரி நாவலில் ஹீரோவாக நடிப்பது யார்? தயாரிப்பது யார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
கங்குவா தோல்வி காரணமாக, வரலாற்று படங்களில் நடிப்பது இல்லை என சூர்யா முடிவெடுத்துவிட்டார். அஜித்தும் ஆர்வம் காண்பிக்கவில்லை. கேம் சேஞ்சர் அனுபவத்தால் ராம் சரணும் மறுக்கிறார் என சொல்லப்படும் நிலையில், யாரை வைத்து ஷங்கர் படத்தை இயக்கப் போகிறார். வேள்பாரி படம் 3 பாகங்களாக வரும் என்று கூறப்படுவதால் கிட்டத்தட்ட ஆயிரம் கோடி முதலீட்டை, வரிசையாக தோல்வி படம் கொடுத்த ஷங்கரை நம்பி யார் கொடுக்கப் போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.




