நவம்பர் 7ல் சிறிய படங்களின் வெளியீடுகள் | ராஜமவுலி, மகேஷ்பாபு பட அறிவிப்புக்கு பிரம்மாண்ட விழா | இரண்டே நாட்களில் 30 கோடி வசூலித்த 'பாகுபலி த எபிக்' | அடுத்த ஆண்டு ஜூனில் தனுஷ் - மாரி செல்வராஜ் இணையும் பிரமாண்ட படம்! | ஷாருக்கானின் 60வது பிறந்தநாளில் வெளியான கிங் படத்தின் டீசர்! | நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்! | ‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் | தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! |

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கடைசி படம் 'ஜனநாயகன்'. அவருடன் பூஜாஹெக்டே, பாபி தியோல், நரேன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். இந்த ஆண்டு அக்டோபரில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தவர்கள், தற்போது அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீஸ் அன்று தேதியை மாற்றி விட்டதாக ஒரு புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
மேலும் சுதா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் 'பராசக்தி' படத்தையும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தான் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். ஆனால் தற்போது விஜய் படமும் அதே பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுவதால், இது உறுதியாகும் பட்சத்தில் விஜய் படத்துடன் மோதாமல் 'பராசக்தி' படத்தை பொங்கலுக்கு முன்கூட்டியே வெளியிட இயக்குனர் சுதா திட்டமிட்டு வருவதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.