தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி |

தெலுங்கில் 'கார்த்திகேயா, பிரேமம், சவ்யசாச்சி, பிளடி மேரி, கார்த்திகேயா 2' ஆகிய படங்களை இயக்கிய சந்து மொன்டேட்டி தற்போது இயக்கியுள்ள படம் 'தண்டேல்'. இப்படத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். தெலுங்கில் தயாரான இப்படம் அடுத்த வாரம் பிப்ரவரி 7ம் தேதி தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.
இப்படத்தின் இயக்குனரான சந்து மொன்டேட்டி அடுத்து சூர்யா கதாநாயகனாக நடிக்க உள்ள படத்தை இயக்கப் போவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 'தண்டேல்' படத்தின் கதையைத் தயாரிப்பாளர் அல்லு அரவிந்திடம் சொன்ன போது சூர்யா, அல்லது ராம் சரண் நாயகனாக நடிக்க ஒரு படத்தை இயக்க வாய்ப்பு தருவதாகச் சொன்னார். அப்படத்திற்காக அவர் 300 கோடி வரை செலவு செய்யத் தயாராக இருந்ததாகவும் கூறியுள்ளார். தன் மீது அவ்வளவு நம்பிக்கையை அல்லு அரவிந்த் வைத்திருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
சூர்யா தற்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தில் நடிக்க உள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடித்துள்ள 'ரெட்ரோ' படம் மே மாதம் 1ம் தேதி வெளியாக உள்ளது.