சசி, விஜய் ஆண்டனி படத்தலைப்பு நூறுசாமி | மினி இட்லியாக சுவைக்கப்படணும் : பார்த்திபன் ஆசை | கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வரும் குஷி ரவி | ஹீரோவான ‛பிக் பாஸ்' விக்ரமன் | ‛பறந்து போ' கிரேஸ் ஆண்டனிக்கு திருமணம் : 9 வருட காதலரை மணந்தார் | பிளாஷ்பேக் : 33 முறை மோதிய விஜயகாந்த், பிரபு படங்கள் | பிளாஷ்பேக்: முத்துராமலிங்கத் தேவர் பார்த்த ஒரே படம் | இன்று ரவிமோகன் பிறந்த நாள்: சிறப்பு போஸ்டர்கள் வெளியிட்டு வாழ்த்து | மடோனா, இவ்வளவு அழகாகப் பாடுவாரா ? | திருமணம் எப்போது? அதர்வா நச் பதில் |
கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய், சித்தி இட்னானி, தன்யா ரவிச்சந்திரன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'ரெட்ட தல'. சிவகார்த்திகேயன் நடித்த 'மான் கராத்தே' படத்தை இயக்கிய திருக்குமரன் அவரது பெயருடன் கிரிஷ் என்பதைச் சேர்த்து கிரிஷ் திருக்குமரன் ஆக இப்படத்தை இயக்கி வருகிறார்.
அருள்நிதி நடித்த 'டிமான்டி காலனி 2' படத்தை வெளியிட்ட பிடிஜி யுனிவர்சல் என்ற நிறுவனத்தின் முதல் தயாரிப்பு இந்தப் படம். அருண் விஜய்யின் 36வது படமாக உருவாகியுள்ள 'ரெட்ட தல' படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ஆரம்பமானது. கோவா, புதுச்சேரி, தரங்கம்பாடி, சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்தனர்.
தற்போது இந்தப் படத்திற்கான தனது டப்பிங் பணிகளை அருண் விஜய் முடித்துள்ளார். விரைவில் இப்படத்தின் வெளியீடு பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளது.