இரண்டாவது வாரத்தில் 'மதராஸி', லாபம் கிடைக்குமா ? | 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நஸ்ரியா | ஹவுஸ்புல் ஆகும் ஜப்பானியத் திரைப்படம் | கார்மேனி செல்வத்தின் கதை என்ன? | பிளாஷ்பேக்: விஜயகாந்தின் இரட்டை வேட கணக்கை துவக்கிய ராமன் ஸ்ரீ ராமன் | பிளாஷ்பேக் : தேவதாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்ட சவுகார் ஜானகி | நடிப்பும், எழுத்தும் எனது இரு கண்கள்: 'லோகா' எழுத்தாளர் சாந்தி பாலச்சந்திரன் | சரோஜாதேவி, விஷ்ணுவர்தனுக்கு கர்நாடக ரத்னா விருது | பிகினிக்கு வயது ஒரு தடையா ? நோ… | தீபாவளி போட்டியில் 'காந்தா' ? |
2025ம் ஆண்டு பிறந்து அதற்குள் நான்கு வாரங்கள் ஓடிவிட்டது. இந்த நான்கு வாரங்களில் 21 படங்கள் வெளிவந்துவிட்டன. பொங்கலுக்கு வெளிவந்த படங்களில் 'மத கஜ ராஜா' படம் மட்டுமே 50 கோடி வசூலைக் கடந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 'காதலிக்க நேரமில்லை' படம் சுமாரான வெற்றியைப் பெற்றது.
மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான அடுத்த வாரம் ஜீவா, அர்ஜுன் நடிக்கும் 'அகத்தியா' படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அன்றைய தினம் அப்படம் வெளியாகாது எனத் தெரிகிறது. 'பிக் பாஸ்' புகழ் ஆரவ் நடிக்கும் 'ராஜ பீமா' படம் ஜனவரி 31 வெளியீடு என இன்று அறிவித்துள்ளார்கள். வேறு எந்தப் படத்தின் அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
பிப்ரவரி 6ம் தேதி அஜித் நடித்துள்ள 'விடாமுயற்சி' படம் வெளிவர உள்ளதால் புதிய படங்களின் வெளியீடுகளில் ஒரு இடைவெளி வர வாய்ப்புள்ளது. அன்றைய தினம் வேறு எந்தப் படமும் வெளியாகவில்லை. 'விடாமுயற்சி' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தால் பிப்ரவரி 14ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட படங்கள் கூட தள்ளிப் போக வாய்ப்புள்ளது.