வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் |
இயக்குனர் மிஷ்கின் பொது மேடைகளில் தொடர்ந்து அநாகரீகமாக பேசி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எல்லோரையும் வாடா போடா என்று அழைப்பது, அவன் இவன் என ஒருமையில் குறிப்பிடுவது, கெட்ட வார்க்தைகளை பயன்படுத்துவது, பெண்கள் குறித்து அவதூறு பேசுவது என தொடர்ந்து அவர் இந்த போக்கை கடைபிடித்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு நடந்த 'பாட்டில் ராதா' என்ற படத்தின் விழாவில் அவர் பேசியது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. மதுவின் தீங்கை பற்றி உருவான படத்தின் விழாவில் சினிமாவில் நான்தான் அதிகமாக குடித்தவன், குடித்துக் கொண்டிருப்பவன், இன்னும் குடிப்பவன் என்று பேசியதோடு. குடிப்பவர்களை அவமரியாதை செய்யாதீர்கள் என்றும் கூறினார். மேலும் பட விழாவில் ஆபாச வார்த்தைகளையும் பேசினார். மிஷ்கினின் இந்த பேச்சுக்கும், இதனை ரசித்து கேட்ட வெற்றிமாறன், அமீர், பா.ரஞ்சித் ஆகியோருக்கும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
நேற்று நடந்த 2கே லவ் ஸ்டோரி என்ற படவிழாவில் பேசிய நடிகர் அருள்தாஸ் “இதே மேடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மிஷ்கின் பேசியது மிக ஆபாசமாக இருந்தது. அதை பார்த்து மிக வருத்தமாக இருந்தது. அவரை பல மேடைகளில் தொடர்ந்து பார்த்து வருகிறேன். பல ஜாம்பவான்கள், தமிழ் ஆளுமைகள் பலரும் இந்த மேடைக்கு வந்து சென்றுள்ளனர். மிஷ்கின் அநாகரிகமாக பேசியது வருத்தமாக இருந்தது. மேடை நாகரிகம் என ஒன்று உள்ளது. அங்கு வந்து கொச்சையான வார்த்தைகளை உபயோகிப்பது ஏற்புடையதாக இல்லை. ஆங்கில படங்களை காப்பி அடித்து படம் எடுக்கும் போலி படைப்பாளி அவர். அவருக்கும் பெண் குழந்தை உள்ளது என்பதை உணர்ந்து பேச வேண்டும்”. என்றார்.
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இதுபற்றி கூறியிருப்பதாவது : மிஷ்கின் எனக்கும் எனது குடும்பத்திற்கும் நல்ல நண்பர். தன் மனதில் பட்டதை பேசுபவர். அவரைப் போல் சிலசமயம் நானும் மனதில் பட்டதை பேசி எதிர்வினைகளை சந்தித்துள்ளேன். ஆனால் இப்போது அவர் பேசியதை நியாயப்படுத்த மாட்டேன். இதற்கு முன்பும் ஒரு முறை பல சினிமா ஜாம்பவான்கள் முன் அவர் முகம் சுழிக்கும் வகையில் பேசியிருக்கிறார்.
மிஷ்கின், இந்திய சினிமாவின் முக்கிய படைப்பாளி. அவர் அவரது நல்ல செயல்களுக்காக கொண்டாடப்பட வேண்டும். இதுபோன்ற பேச்சுகளுக்காக அல்ல. அவருடன் இருப்பவர்கள்தான் இதை எடுத்துச் சொல்ல வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக அவரது நலம் விரும்பி என்கிற வகையில் கண்டிப்பாக மிஷ்கினிடம் நான் பேசுவேன். என்றார்.
இயக்குநர் லெனின் பாரதி, எக்ஸ் வலைதளத்தில், “பெண்கள் பற்றி தட்டையான பொதுபுத்தியில் மிஷ்கின் பேசிய ஆபாச பேச்சை கண்டிக்காமல் சிரித்து கடந்து போன பா.ரஞ்சித், அமீர், வெற்றிமாறன் உள்ளிட்ட மேடையிலிருந்த அத்தனை படைப்பாளர்களுக்கும் எனது கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.