வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் |
மாதவன் நடித்த ‛மின்னலே' படத்தில் இயக்குனரானவர் கவுதம் மேனன். அதையடுத்து 2003ல் சூர்யா நடிப்பில் ‛காக்க காக்க' என்ற படத்தை இயக்கினார். இந்த படம் சூர்யாவின் கேரியரில் முக்கியமான படமாக அமைந்தது. அதையடுத்து 2008ம் ஆண்டில் ‛வாரணம் ஆயிரம்' என்ற படத்தையும் சூர்யா நடிப்பில் இயக்கினார் கவுதம் மேனன். அதன் பிறகு அவர்கள் இருவரும் இணையவில்லை.
இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் ‛டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' என்ற படத்தை இயக்கியிருக்கிறார் கவுதம் மேனன். அந்த படம் ஜனவரி 23ம் தேதி திரைக்கு வருகிறது. அடுத்தபடியாக விஷால் நடிப்பில் ஒரு படத்தை இயக்கத் திட்டமிட்டு இருக்கிறார். இந்த நேரத்தில் கவுதம் மேனன் அளித்துள்ள ஒரு பேட்டியில், காக்க காக்க, வாரணம் ஆயிரம் படங்களுக்கு பிறகு சூர்யாவுடன் மீண்டும் இணையாதது குறித்து அவரிடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, ‛‛துருவ நட்சத்திரம் படத்தின் கதையை முதலில் சூர்யாவிடம்தான் சொன்னேன். ஆனால் அந்த கதையில் அவர் நடிக்க மறுத்துவிட்டார். அதன் காரணமாகவே நாங்கள் மீண்டும் இணையவில்லை. அவரை வைத்து காக்க காக்க, வாரணம் ஆயிரம் என்ற இரண்டு வெற்றி படங்களை கொடுத்திருக்கிறேன். அதற்காகவாவது அவர் என்னை நம்பி இருக்கலாம். அவர் துருவ நட்சத்திரத்தில் நடிக்க மறுத்தது எனக்கு பெரிய வருத்தத்தை கொடுத்தது'' என்று கூறியிருக்கிறார் இயக்குனர் கவுதம் மேனன்.