இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

கமல் பிரகாஷ் என்பவர் இயக்கத்தில், பேச்சுலர் படத்தை அடுத்து ஜி.வி.பிரகாஷ் குமார் - திவ்யபாரதி இணைந்து நடித்துள்ள படம் 'கிங்ஸ்டன்'. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கிங்ஸ்டன் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. முழுக்க முழுக்க கடலுக்குள் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் ஒரு பேண்டஸி திரைப்படமாக உருவாகி உள்ளது.
'இந்த கடலுக்குள் போன யாரும் திரும்பி வந்ததில்லை. மீறி போனால் பேயின் பிடியில் சிக்கிக் கொள்வார்கள்' என்ற ஒரு பேச்சு இருந்து வரும் நிலையில், நடுக்கடலுக்குள் ஒரு கப்பலுக்குள் மர்மமான முறையில் ஜி.வி.பிரகாஷூம், திவ்யபாரதியும் சிக்கி கொள்கிறார்கள். அதிலிருந்து அவர்கள் எப்படி தப்பி வருகிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் கதையாக உள்ளது. தூத்துக்குடி மண்வாசனை கதையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமாரே இசையமைத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகும் இந்தப் படம் மார்ச் 7ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.