எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் |
மறைந்த நடிகர் முரளியின் மூத்த மகன் அதர்வா பல வருடங்களாக கதாநாயகனாக நடித்து வருகிறார். தற்போது முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளியும் 'நேசிப்பாயா' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அதிதி ஷங்கர் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தை விஷ்ணுவர்தன் இயக்கி உள்ளார். இப்படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.
இதற்கான புரொமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார் ஆகாஷ் முரளி. இப்போது அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, "நான் சிறுவயதில் அப்பா உடன் படப்பிடிப்பிற்கு செல்வேன். சினிமா மீதான ஆர்வம் அப்போது இருந்தே வளர்ந்தது. அப்பாவை போன்றே நானும் நடிகனாக வேண்டும் என்ற கனவும் பெருகியது. ஆனால் டிகிரி முடிக்காமல் சினிமாவிற்கு வரக்கூடாது என்று அப்பா கூறிவிட்டார். அதன்பிறகு எனக்கு பிடித்த எம்.பி.ஏ படிப்பை படித்து முடித்தேன். இப்போது சினிமாவில் நடிக்கிறேன்" என்றார்.