பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? |
ரஜினி நடிப்பில் சிவாஜி, எந்திரன், 2.0 போன்ற படங்களை இயக்கியவர் ஷங்கர். தற்போது ராம்சரண் நடிப்பில் 'கேம் சேஞ்சர்' என்ற படத்தை இயக்கி உள்ளார். அப்படம் வருகிற 10ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் ஷங்கரிடத்தில் மீண்டும் ரஜினியை வைத்து எப்போது படம் இயக்குவீர்கள்? என்று மீடியாக்கள் ஒரு கேள்வி கேட்டனர்.
அதற்கு, ''ரஜினிக்கு பொருத்தமான கதைகள் அமையும்போது கண்டிப்பாக மீண்டும் அவரை வைத்து படம் இயக்குவேன்'' என்று தெரிவித்திருக்கிறார். அதனால் கேம் சேஞ்சர் படத்தை அடுத்து இந்தியன்- 3 மற்றும் வேள்பாரி பட வேலைகளில் இறங்கும் ஷங்கர், அந்த படங்களுக்கு பிறகு கூட மீண்டும் ரஜினியுடன் இணைவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.