துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகை மீனாட்சி சவுத்ரி தமிழில் கொலை, சிங்கப்பூர் சலூன், தி கோட் ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடந்தாண்டு இவர் நடித்த தி கோட் , லக்கி பாஸ்கர் ஆகிய படங்கள் மூலம் நல்ல வரவேற்பைப் பெற்றார்.
தற்போது தெலுங்கில் நடிகர் வெங்கடேஷ் உடன் இணைந்து ' சங்கராந்திகி வஸ்துனம்' எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் புரொமோசன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அவர் கூறியதாவது, " இந்த படத்தின் மூலம் நான் முதல் முறையாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளேன். இதில் நான் ஆக்ஷன் மற்றும் நகைச்சுவை என இரு விதமாகவும் நடித்துள்ளேன். இதுவரை நான் இந்த மாதிரி கதாபாத்திரம் ஏற்று நடித்தது இல்லை. இதுவே முதல்முறை" என்கிறார்.