இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

நடன இயக்குனர் கல்யாண் தமிழில் பல முன்னணி நடிகர்களில் இடம்பெறும் பாடல்களுக்கு நடனம் இயக்கியுள்ளார். ஆனால், நடிகர் அஜித் குமாரின் வில்லன், மங்காத்தா, அட்டகாசம், வேதாளம், விஸ்வாசம், துணிவு தற்போது விடாமுயற்சி வரை அஜித்தின் பெரும்பாலான பட பாடல்களுக்கு நடனம் இயக்கியவர் கல்யாண்.
கல்யாண் அளித்த பேட்டியில் அஜித் குமார் குறித்து கூறியதாவது, "பைக் மீதான காதலை இப்போ வரைக்கும் அவர் கைவிடவில்லை. எப்போதும் நேசித்து கொண்டே இருக்கிறார். அப்படிபட்ட தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கொண்ட மனிதரோடு தொடர்ந்து பயணித்து வருகிறேன். அதே மாதிரியும் சினிமாவையும் ரொம்ப நேசிக்கின்றார். தயாரிப்பாளர் அவரால் கஷ்டப்படக் கூடாது, நஷ்டப்படக் கூடாது என மிக கவனமாக உள்ளார். உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் அவரால் படப்பிடிப்பு பாதிக்கக் கூடாது என முடித்து தருவார்". என இவ்வாறு கூறினார்.