ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை |
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள படம் 'விடாமுயற்சி'. திரிஷா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிரூத் இசையமைக்கிறார். இரண்டு வருடங்களாக லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வந்தது. வரும் பொங்கலுக்கு இப்படம் வெளிவருவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்துவிட்டனர்.
இதற்கிடையே அருண் குமார் இயக்கத்தில் விக்ரம், துஷாரா விஜயன் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛வீர தீர சூரன்'. இந்த படமும் பொங்கல் வெளியீட்டை குறி வைத்து உருவானது. ஆனால் விடாமுயற்சி பட ரிலீஸால் இதன் ரிலீஸ் தள்ளிப்போனது. தற்போது விடாமுயற்சி படத்தை குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 23ம் தேதி வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இப்போது வீர தீர சூரன் படக்குழு குழப்பத்தில் உள்ளதாம். காரணம் அன்றைய தினத்தில் வீர தீர சூரன் படத்தை வெளியிடலாம் என எண்ணியிருந்தனராம்.