துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
பாகுபலி படத்தில் இரண்டு பாகங்களுக்கும் கிடைத்த தொடர் வெற்றி இயக்குனர் ராஜமவுலியை ஒரு பான் இந்தியா இயக்குனராக மாற்றியதுடன் அவரது படங்களுக்கு உலகெங்கிலும் ரசிகர் வட்டத்தை உருவாக்கி விட்டது. அதை தொடர்ந்து வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகும் நிலையில் ராஜமவுலி அடுத்ததாக மகேஷ்பாபு படத்தை இயக்குவதற்கான முன்கட்டப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
பொதுவாகவே ராஜமவுலி இயக்கும் படங்கள் குறைந்தபட்சம் மூன்று வருடங்களாவது எடுத்துக் கொள்ளும் என்பதைத்தான் இதுவரை பார்த்து வந்திருக்கிறோம். ஆனால் சமீபத்தில் நடைபெற்ற ராம்சரணின் கேம் சேஞ்சர் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ராஜமவுலி கலந்து கொண்டபோது ராம்சரண் தான் கணித்துள்ள ஒரு விஷயம் பற்றி கூறினார். அதாவது இனி புதிதாக கோவிட் போன்ற எந்த ஒரு புதிய இயற்கை பாதிப்பும் ஏற்படாவிட்டால் நிச்சயமாக ஒன்றரை வருடங்களில் ராஜமவுலி - மகேஷ்பாபு படம் ரிலீஸுக்கு வந்துவிடும் அவருடன் பணியாற்றிய வகையில் நான் இதை கணித்து சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.
கடந்த வருடம் இதே சங்கராந்தி பண்டிகைக்கு மகேஷ்பாபுவின் குண்டூர் காரம் வெளியாகி வெற்றி பெற்றது. ஆனால் இந்த வருடம் மகேஷ்பாபுவுக்கு ரிலீஸ் ஆகும் விதமாக எந்த படமும் இல்லை. ராஜமவுலியன் படம் தான் அடுத்ததாக மகேஷ் பாபுவுக்கு வெளியாக இருக்கும் படம். அந்த வகையில் அடுத்த வருடம் இந்த படம் வெளியாகி விடும் என ராம்சரண் கூறியிருப்பது மகேஷ்பாபு ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது.