ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
அஜித் நடித்த 'விடாமுயற்சி' படம் பொங்கல் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியானது. அதையடுத்து உடனடியாக சில சிறிய படங்கள் பொங்கலுக்கு வெளிவருகிறோம் என்ற அறிவிப்பை வெளியிட்டன. நேற்று இரவுக்குள் மேலும் சில புதிய படங்கள் பொங்கலுக்கு வருகிறோம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
சுசீந்திரன் இயக்கியுள்ள '2 கே லவ் ஸ்டோரி', விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள 'படைத் தலைவன்', ஜெயம் ரவி, நித்யா மேனன் நடித்துள்ள 'காதலிக்க நேரமில்லை' ஆகிய படங்கள் புதிதாக இணைந்துள்ளன.
ஜனவரி 10ம் தேதியில் 'வணங்கான், டென் ஹவர்ஸ், மெட்ராஸ்காரன், 2 கே லவ் ஸ்டோரி' ஆகிய 4 படங்களும், ஜனவரி 14ம் தேதி 'காதலிக்க நேரமில்லை' படமும், பொங்கல் வெளியீடு என இன்னும் தேதியை அறிவிக்காமல் 'படைத் தலைவன், தருணம்,' என இதுவரையில் 7 படங்கள் பொங்கல் வெளியீட்டில் இணைந்துள்ளன. இவை தவிர டப்பிங் படமான 'கேம் சேஞ்சர்' படமும் பொங்கலுக்கு வெளிவருகிறது.
இவற்றோடு ஜனவரி வெளியீடுகள் என அறிவிக்கப்பட்டுள்ள சில படங்களில் ஓரிரு படங்கள் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் எனத் தெரிகிறது.
'நேசிப்பாயா' படமும் பொங்கல் வெளியீடு என அறிவிக்கப்பட்டுள்ளது.