எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் |
நடிகர் அஜித் நடிப்பில் வெளியாக உள்ள விடாமுயற்சி திரைப்படம், பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படாது என அதன் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் 'விடாமுயற்சி'. இதில் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த வாரத்தில் நிறைவு பெற்றது. தொடர்ந்து டப்பிங் பணிகளையும் அஜித் நிறைவு செய்துள்ளார். 2025ம் ஆண்டு பொங்கலுக்கு படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், பொங்கலுக்கு படம் ரிலீஸ் செய்யப்படாது என, அதன் தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது. இதுகுறித்து லைகா வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைவரும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். சில தவிர்க்க முடியாத காரணங்களால், விடாமுயற்சி திரைப்படம், பொங்கல் வெளியீட்டில் இருந்து பிற்போடப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது.
புத்தாண்டை ஒட்டி, விடாமுயற்சி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகும் என, ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், எதிர்பாராத இந்த அறிவிப்பு, அஜித் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.