அஜித்தின் அடுத்த படம்: சஸ்பென்ஸாக இருக்கும் நிறுவனம் | அஜித்தின் 'டாப் வசூல்' படமாக மாறுமா 'குட் பேட் அக்லி' | நடிகர் நானிக்கு ஓடிடி-யில் அடித்த ஜாக்பாட் | குபேரா : தெலுங்குக்கே முன்னுரிமை? | மகனுக்காக திருப்பதியில் முடி காணிக்கை செலுத்தி அன்னதானம் செய்த பவன் கல்யாண் மனைவி | 6 மாதத்தில் 15 கிலோ எடை குறைத்த ரஜிஷா விஜயன் | குஞ்சாக்கோ போபன் - பாவனா எதிர்பாராத சந்திப்பு | ஹிந்தி படத்தில் கரீனா கபூருக்கு ஜோடியாக இணைந்த பிரித்விராஜ் | இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார் | ஒரே நாளில் 3 படங்கள் ; மூன்றிலும் வீணடிக்கப்பட்ட வில்லன் நடிகர் |
மலையாள சினிமாவில் முன்னணி நடிகரான மோகன்லால் முதல் முறையாக 'பரோஸ்' என்கிற படத்தை பெரும் பொருட்செலவில் இயக்கி, நடித்து உள்ளார். 3டி படமாக வெளியான இந்த படம் வசூல் ரீதியாக பெரும் தோல்வியை நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்த நிலையில் பரோஸ் படம் வெளிவந்த பிறகு மோகன்லால் அளித்த பேட்டி ஒன்றில், "பரோஸ் படம் பாக்ஸ் ஆபிஸ் தோல்வியை நோக்கி நகர்கிறது. 47 ஆண்டுகளாக மக்கள் எனக்கு தருகின்ற அன்புக்காகவும், மரியாதைக்காகவும் அவர்களுக்கு ஏதாவது செய்ய விரும்பினேன். பரோஸ் நான் அவர்களுக்கு தந்த பரிசு. இதை நான் பணத்துக்காக செய்யவில்லை. இப்படத்தை குடும்பம், குழந்தைகளுடன் கண்டுகளிக்க நான் உருவாக்கினேன்" என தெரிவித்துள்ளார்.