சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி | டீசலுக்கு பின்னால் இருக்கும் அரசியலை பேசும் படம் | பீரியட் பிலிமில் ஐஎன்ஏ அதிகாரியாக நடிக்கும் சசிகுமார் | பிளாஷ்பேக்: நடிகராக ஜெயிக்க முடியாத சிவாஜி வாரிசு | நடிகை வைஜெயந்தி மாலா நலம் : மகன் தகவல் | பிளாஷ்பேக்: கருணாநிதியுடன் இணைந்து படம் தயாரித்த எம்ஜிஆர் | அறிக்கையும் இல்லை, கொண்டாட்டமும் இல்லை : இது அஜித் பாலிசி | விதார்த்தை சீனியர் என்றார் அம்மாவாக நடித்த ரக்ஷனா | கரூர் சம்பவத்தால் காலியான குஷி வசூல் |
24 ஆண்டுகளுக்கு முன்பு விஜயகாந்த் நடித்த 'வல்லரசு' படத்தை இயக்கியவர் என்.மகாராஜன். இதே படத்தை 'இந்தியன்' என்ற தலைப்பில் ஹிந்தியில் ரீமேக் செய்தார். பின்னர் அஜித் நடித்த 'ஆஞ்சநேயா' படத்தை இயக்கினார். கடைசியாக விஜயகாந்த் நடிப்பில் 'அரசாட்சி' என்ற படத்தை இயக்கினார். 2004ம் ஆண்டு இந்த படம் வெளிவந்தது. அதன்பிறகு படம் எதுவும் இயக்கவில்லை.
தற்போது 20 வருடங்களுக்குப் பிறகு சிவராஜ்குமார் நடிக்கும் கன்னட படத்தை இயக்குகிறார். அமெரிக்காவில் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்ட பிறகு சிவராஜ்குமார் நடிக்கும் படம் இது. மும்பையைச் சேர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனமான ஆட்-ஒன் நிறுவனத்தின் சார்பில் மனோஜ் பனோட் மற்றும் கெம்சந்த் காட்கி தயாரிக்கிறார்கள். 2025ல் படப்பிடிப்பு நடத்தப்பட்டு ஆண்டு கடைசியில் வெளியாகிறது.
இந்தப் படம் கன்னடத்தில் தயாரானாலும் பான் இந்தியா படமாக வெளியிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகைகள் பற்றி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.