அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி | உருட்டு உருட்டு : நாகேஷ் பேரன் நாயகனாக நடிக்கும் படம் |
சிவகுமார் நடித்த முக்கியமான படங்களில் ஒன்று 'நெருப்பிலே பூத்த மலர்'. இதில் பூர்ணிமா ஜெயராம் அவரது ஜோடியாக நடித்தார். இவர்கள் தவிர சத்தார், வி.கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் நடித்தனர். கவுசி என்பவர் இயக்கினார். இந்த படத்தின் கதைப்படி கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த சிவகுமாரும், பூர்ணிமாவும் காதலிப்பார்கள். ஆனால் இவர்களின் காதலை சிவகுமாரின் அப்பா ஏற்கவில்லை. அவர்களை பிரித்து, மகனை பாதிரியார் ஆக்குகிறார். பல வருடங்களுகு பிறகு பூர்ணிமா ஆசிரியையாக பணியாற்றும் பள்ளிக்கே சிவகுமார் பாதராக செல்கிறார். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பது கதை.
படத்தின் கிளைமாக்ஸில் சிவகுமார் ஒரு பெண்ணை கெடுத்து விட்டதாக கருதும் ஊர் பொதுமக்கள் அவரை தெருவில் ஓடவிட்டு கல்லால் அடிப்பார்கள்.
படத்தின் பணிகள் முடிந்ததும் சிவகுமார் தனது நண்பர்களுக்கு படத்தை போட்டுக் காட்டினார். அந்த சிறப்பு காட்சிக்கு சிவகுமாரின் மகன்கள் சூர்யாவும், கார்த்தியும் வந்திருந்தார்கள். சூர்யாவுக்கு 8 வயது கார்த்திக்கு 6 வயது. கிளைமாக்சில் சிவகுமார் அடிவாங்குவதை பார்த்த கார்த்தி 'அப்பாவை அடிக்காதீங்க... அப்பாவை அடிக்காதீங்க' என்று கதறி அழுதார். படம் விட்டு வெளியில் வந்தும் கார்த்தி அழுவதை நிறுத்தவில்லை. கார்த்திக்கிற்கு பிடித்த ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தும் அன்று முழுக்க அழுது கொண்டே இருந்தாராம் கார்த்தி. பின்னர்தான் சினிமா வேறு, நிஜம் வேறு என மகனுக்கு புரிய வைத்தார் சிவகுமார்.