ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தமிழகத்தை சேர்ந்த குகேஷ் இளம் வயதிலிலேய உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். பிரதமர், ஜனாதிபதி, முதல்வர், கவர்னர் உள்ளிட்ட பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். தமிழக அரசு 10 கோடி ரூபாய் பரிசு அறிவித்தது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் , இன்று(டிச., 26) குகேஷை தனது போயஸ் கார்டன் இல்லத்தில் நேரில் அழைத்து பாராட்டினார். இதுபற்றி குகேஷ் கூறுகையில், ‛‛நன்றி ரஜினி சார், உங்கள் அன்பான வாழ்த்து நன்றி'' என தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது குகேஷின் பெற்றோரும் உடன் இருந்தனர்.
இதேப்போல் சிவகார்த்திகேயனும் குகேஷை தனது அலுவலகத்திற்கு அழைத்து நேரில் பாராட்டினார். செஸ் வடிவிலான கேக் வெட்டி அதனை அவருக்கு ஊட்டி மகிழ்ந்தார். பின்னர் அவருக்கு விலை உயர்ந்த கடிகாரம் ஒன்றை பரிசளித்தார். குகேஷ் மென்மேலும் பல சாதனைகள் படைப்பதற்கு வாழ்த்து தெரிவித்தார்.
இது குறித்து சிவகார்த்திகேயன் குறிப்பிடும்போது “குகேஷ் மில்லியன் கணக்கான இளம் இந்தியர்களுக்கான உத்வேகம். அவரை பாராட்டியன் மூலம் என்னை நான் பெருமைப்படுத்திக் கொண்டேன்” என்றார்.