ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டக் கூடியவர் நடிகை சமந்தா. இந்த நிலையில் ஐதராபாத்தை சார்ந்த அர்பன் கிஷான் என்ற ஷார்ட் அப் நிறுவனத்தில் தானும் முதலீடு செய்து இருக்கிறார் சமந்தா. இந்த நிறுவனம் மண்ணே இல்லாமல் காய்கறிகளை விளைவித்து வருகிறது. இங்கு நவீன தொழில்நுட்பத்தின் மூலம் நீர் மற்றும் காற்றின் ஈரப்பதத்தை பயன்படுத்தி உணவு பொருட்களை விளைவித்து வருகிறார்கள். இப்படி தொழில்நுட்பத்தின் மூலம் காய்கறியின் உற்பத்தியை 10 மடங்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளார்கள்.
இந்த நிறுவனத்தின் மூலம் 50 வகையான காய்கறி, பழங்கள், மலர்களை பயிரிட்டு விநியோகம் செய்து வருகிறார்கள். இந்த நிறுவனத்தில் தான் நடிகை சமந்தாவும் முதலீடு செய்து இருக்கிறார். அதோடு கடந்த 2020ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளிலும் அவர் அவ்வப்போது பங்கேற்று வருகிறார்.