துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
150 ரூபாய் கொடுத்து ஒரு படம் பார்க்க செல்கிறோம். பத்து நிமிடத்துக்கு மேல் படத்தை உட்கார்ந்து பார்க்க முடியவில்லை. ஆனாலும் 150 கொடுத்த விட்டோமே என்பதற்காக தலைவலியோடு படத்தை பார்த்து திரும்புகிறோம். இப்படியான நிலையை மாற்ற மல்டிபிளக்ஸ் தியேட்டர் நிறுவனமான ஐநாக்ஸ் மற்றும் பிவிஆர் நிறுவனம் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.
ஒரு ரசிகர் 50 சதவீத படத்தை மட்டுமே பார்த்தால், அவருக்கு 50 சதவீத டிக்கெட் கட்டணம் திருப்பி தரப்படும். 25 முதல் 50 சதவீதம் படம் மீதி இருந்தால், 30 சதவீதம் டிக்கெட் தொகை திருப்பி தரப்படும். 50 சதவீதத்துக்கு மேல் படம் இருந்தால், 60 சதவீதம் திருப்பி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ரெனாட் கூறியிருப்பதாவது: டிக்கெட் ரிசர்வ் செய்பவர்கள், வழக்கமான டிக்கெட் கட்டணத்தை விட கூடுதலாக 10 சதவீதம் கொடுத்து டிக்கெட்டை ரிசர்வ் செய்ய வேண்டும். ஏஐ கேமரா மூலம் தியேட்டரில் இருப்போர் கண்காணிக்கப்படுவார்கள். ரசிகர்கள் புக் செய்யும் டிக்கெட், அவர்களின் இருக்கையுடன் இணைக்கப்படும். இதன் மூலம் யார் உள்ளே இருக்கிறார்? ஒருவர் எப்போது உள்ளே வருகிறார், எப்போது வெளியே செல்கிறார் என்று அனைத்தையும் கண்காணிப்போம். ரசிகர்கள் எப்போது வெளியேறுகிறார்கள் என்பதை வைத்து, அதற்கேற்ப டிக்கெட் கட்டணம் கணக்கிடப்படும். அதன்பிறகு திருப்பி கொடுக்க வேண்டிய பணத்தை அவர்களுக்கு ஆன்லைன் மூலமே அனுப்பி வைக்கப்படும். என்றார்.
கடந்த சில ஆண்டுகளாக தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை 19 சதவீதமும், கொரோனா பரவலுக்குப் பிறகு 25 சதவீதமும் குறைந்துவிட்டது. அதோடு கொரோனா லாக்டவுனுக்கு பிறகு ஓடிடி தளங்கள் பெருகிவிட்ட நிலையில், தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பதில் மக்களுக்கு ஆர்வம் குறைந்துவிட்டது. அதனால் இந்த திட்டம் கொண்டு வரப்படுவதாக கூறப்படுகிறது.