ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

தமிழ் சினிமாவில் 60, 70 காலகட்டத்தில் நடிகர், காமெடியன், இயக்குனர், பாடகர் என பல பரிமாணங்களில் கலக்கியவர் சந்திரபாபு. அந்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி எந்த அளவிற்கு உச்ச நட்சத்திரமாக வலம் வந்தார்களோ அவர்களுக்கு நிகரான நடிகர் சந்திரபாபு என்றால் மிகையாகாது. கிட்டத்தட்ட 76 படங்களில் நடித்துள்ளார்.
இவர் உச்சத்தில் இருந்த நேரத்தில் க்ரீன் ரோட்டில் 20 ஏக்கரில் வீடு ஒன்றைக் கட்டமைத்து வந்தார். அப்போதே அந்த வீட்டில் நேரடியாக முதல் தளத்திற்கு கார் பார்க் செய்யும் வசதியுடன் கட்டமைத்தார்.
அதன் பின்னர் எம்.ஜி. ஆரை வைத்து 'மாடி வீட்டு ஏழை' எனும் படத்தை சந்திரபாபு இயக்கவிருந்தார். அந்த பட படப்பிடிப்பு பாதியில் கைவிடப்பட்டது. இதனால் அவர் பண ரீதியாக மனதளவில் பெரிதாக பாதிக்கப்பட்டு 1974ம் ஆண்டில் இயற்கை எய்தினார்.
தற்போது இவரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்க நடிகர் தனுஷ் முடிவு செய்துள்ளார். இதில் சந்திரபாபுவாக தனுஷ் நடிக்கவுள்ளார். இதற்காக சந்திரபாபுவின் குடும்பத்தாரிடம் முறையாக அனுமதி பெற்றுள்ளார் என நெருங்கிய வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே தனுஷ் இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்தில் இளையராஜா ஆக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




