100 கோடி வசூலைக் கடந்த 'ஹரிஹர வீரமல்லு' | 'சாயரா' இந்தியாவில் நிகர வசூல் 250 கோடி | 'அவதார் - பயர் அண்ட் ஆஷ்' டிரைலர் ரிலீஸ் | ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் |
மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'வேம்பு'. அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் மெட்ராஸ் ஜானி, தங்கலான், கபாலி படங்களில் நடித்த ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க, திரௌபதி, மண்டேலா படங்களில் நடித்த ஷீலா கதாநாயகியாக நடித்திருக்கிறார். மாரிமுத்து, ஜெயராவ், ஜானகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மணிகண்டன் முரளி இசை அமைத்துள்ளார். குமரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் ஜஸ்டின் பிரபு கூறும்போது “பெண் என்றாலே ஏதாவது குறை சொல்லும் இந்த சமூகத்தில் அதையும் தாண்டி ஒரு தந்தை தன் மகளுக்கு எப்படி ஆதரவாக இருக்கிறார் என்பதுடன். எப்பொழுதும் காவல்துறையோ, அரசாங்கமோ, தனிப்பட்ட நபரோ பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க முடியாத சூழலில், ஒரு பெண் தனிமையில் இருக்கும் போது எப்படி துணிச்சலாக தன்னை பாதுகாத்து கொள்ளலாம் என்கிற ஒரு விஷயத்தையும் இந்தப்படம் சொல்கிறது.
ஒரு நல்ல கருத்தை வலியுறுத்தும் விதமாக சமூக பொறுப்புடன் கூடிய ஒரு சரியான படமாக இதை உருவாக்கி இருக்கிறோம். சிறந்த கதை அம்சம்கொண்ட எதார்தமான திரைபடங்களை மக்கள் வெற்றி பெற செய்து வருகின்றனர், அதே போன்ற எதார்த்த சினிமாக்களின் வரிசையில் இதுவும் இருக்கும். நாயகன், நாயகி இருவருமே இந்த படத்தில் தங்களது கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். 2025 பிப்ரவரியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றார்.