மனிதத்தன்மையை அழித்துவிடும் : நிவேதா பெத்துராஜ் | 200 படங்களை கடந்த 2025 | ரிலீசுக்கு முன்பே லாபத்தை சம்பாதித்துக் கொடுத்த காந்தாரா சாப்டர் 1 | முதல் நாளில் 154 கோடி வசூலித்த பவன் கல்யாணின் ஓஜி | அக்., 1ல் ஓடிடியில் வெளியாகும் மதராஸி | ஜனநாயகன் பாடல் வெளியீட்டு விழா : அரசியல் பேசப்படுமா? அடக்கி வாசிக்கப்படுமா? | சின்ன வயது கஷ்டங்களை சொல்லும் தனுஷ் | கிடா சண்டையை மையமாக கொண்டு உருவாகும் ஜாக்கி | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அர்ச்சனா | பிளாஷ்பேக்: சினிமாவான முதல் உண்மை சம்பவம் |
தமிழ்நாட்டில் பிறந்தாலும் தற்போது சர்வதே திரைப்பட இசை அமைப்பாளராக இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். ஹாலிவுட் படங்களுக்கு இசை அமைப்பதன் மூலம் ஆஸ்கர் விருதுகளை வென்று உலக புகழ் பெற்றுள்ளார். இதனால் சர்வதேச அளவில் பல பொறுப்புகள் அவரை தேடி வருகிறது.
அந்த வரிசையில் ஏ.ஆ.ரஹ்மானுக்கு இங்கிலாந்தில் உயரிய கவுரவம் கிடைத்துள்ளது. லண்டனில் உள்ள உலக புகழ்பெற்ற இசை நாடகம் மற்றும் சமகால நடனத்துக்கான கன்சர்வேட்டரியான டிரினிட்டி லாபான் இசைப்பள்ளியின் கவுரவத் தலைவராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த பதவியில் அவர் ஐந்து ஆண்டுகள் பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறும்போது ''இந்த பொறுப்பை பாக்கியமாகவும், மரியாதைக்குரியதாகவும் கருதுகிறேன். இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்குமான உறவை வலுப்படுத்துவதில் நான் ஒரு காரணியாக இருப்பதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்”என்று தெரிவித்து உள்ளார்.