பிரபல சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா, மதுரையில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்தவுடன் பத்திரிகையாளர் கேள்விகளுக்கு பதிலளித்த ஆல்யா, சினிமாவை விட சீரியலில் நடிப்பது தான் மிகவும் பிடித்திருப்பதாக கூறினார். மேலும், அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், 'நான் விஜய் சாருக்கு தான் ஓட்டு போடுவேன். அவருக்காக பிரசாரம் செய்து ஓட்டு சேகரிக்க நேரமிருக்காது. குடும்பம், சீரியல் என அதிலேயே நேரம் சென்று விடுகிறது. ஆனால் ஓட்டு கண்டிப்பாக அவருக்கு தான் போடுவேன்' என கூறியிருக்கிறார்.